மாநில செய்திகள்

முதல்-அமைச்சராக எப்போது ஆகவேண்டும் என்பதை சசிகலாதான் முடிவுசெய்ய வேண்டும் - மைத்ரேயன் + "||" + Sasikala to decide when she wants to become TN CM

முதல்-அமைச்சராக எப்போது ஆகவேண்டும் என்பதை சசிகலாதான் முடிவுசெய்ய வேண்டும் - மைத்ரேயன்

முதல்-அமைச்சராக எப்போது ஆகவேண்டும் என்பதை சசிகலாதான் முடிவுசெய்ய வேண்டும் - மைத்ரேயன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்- அமைச்சருமாக இருந்து வந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, புதிய முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை, 

தமிழக முதல்-அமைச்சராக எப்போது ஆகவேண்டும் என்பதை சசிகலாதான் முடிவுசெய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பேசிஉள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முதல்- அமைச்சருமாக இருந்து வந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, புதிய முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய தோழி சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனையடுத்து தமிழக முதல்–அமைச்சராக சசிகலா பொறுப்பேற்று வழி நடத்தவேண்டும் என்று கோரிக்கையானது கட்சி தலைமையில் வலுத்து உள்ளது. தமிழக அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

சென்னையில் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக சசிகலா பொறுப்பு ஏற்க கட்சி தயாராக உள்ளது என்பதை குறிப்பிட்டு உள்ளார். செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிஉள்ள மைத்ரேயன், “தமிழக முதல்-அமைச்சராக எப்போது பதவியேற்க வேண்டும் என்பதை சசிகலாதான் முடிவுசெய்ய வேண்டும். நாங்கள் எதுவும் சொல்ல முடியாது,” என்று கூறிஉள்ளார். அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளவரே முதல்-அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையாது நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.