மாநில செய்திகள்

‘ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காப்போம்’ தீபா அறிவிப்பு + "||" + "Jayalalithaa mounted spare lamp burning 'notice Deepa

‘ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காப்போம்’ தீபா அறிவிப்பு

‘ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காப்போம்’ தீபா அறிவிப்பு
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீடு சென்னை தியாகராயநகரில் உள்ளது. இங்கு திருவண்ணாமலை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து நேற்று தொண்டர்கள் வந்து இருந்தனர். அவர்கள் மத்தியில் தீபா பேசியதாவது:– எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்ஆசியுடன்

சென்னை,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீடு சென்னை தியாகராயநகரில் உள்ளது. இங்கு திருவண்ணாமலை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து நேற்று தொண்டர்கள் வந்து இருந்தனர். அவர்கள் மத்தியில் தீபா பேசியதாவது:–

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்ஆசியுடன் நற்பணிகளை விரைவில் தொடருவோம். அதற்கு முன்பாக எல்லோருடைய கருத்தையும் தெரிந்துகொண்டு நல்ல பாதையில் பயணிப்போம். எனவே உங்களுடைய கருத்துகளை எழுதி தரும்படி கேட்கிறேன். தாய் பிள்ளையை காப்பது போல் ஜெயலலிதா நம்மை எல்லாம் காத்து வந்தார்.

அவருடைய புகழை நிலைநாட்டுவதற்கு அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். அன்று முதல் நமக்கு என்று ஒரு பாதையை அமைத்துக்கொள்வோம். ஜெயலலிதா சுடர்விட்டு எரிய வைத்த தீபத்தை அணையாமல் காப்போம். நான் ஏற்கனவே சொன்னேன், நான் (தீபா) உங்கள் வீட்டு பிள்ளை. அதில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரும் காலங்களில் நன்கு பணியாற்றுவேன்.  இவ்வாறு தீபா பேசினார்.