ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்டத்தில் தீவிரமடையும் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்டத்தில் தீவிரமடையும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2017 7:52 AM GMT (Updated: 11 Jan 2017 7:52 AM GMT)

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை,
 
தமிழர்களின்  பாரம் பரிய   வீரவிளை யாட்டு ஜல்லிக்கட்டு.  பொங்கல் தினத்தன்று  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்,  பால மேடு,   அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட காளைகள் வாடிவாசல்களில் அணி வகுத்து  வரும்.  அதனை அடக்க  நூற்றுக்கணக்கான  இளைஞர்கள் ஆர்வத்துடன்  குதூகலம் செய்வார்கள். 
இப்படி சிறப்பான பண்பாட்டு விளையாட்டு கடந்த  2 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற வில்லை. மாடுகள் துன் புறுத்தப்படுகிறது, உயிர் இழப்புகள் ஏற்படுகிறது என்ற காரணத்தால் “பீட்டா” அமைப்பு  தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையால்,  தமிழ கத்தில் ஜல்லிக்கட்டு நிறுத் தப்பட்டு உள்ளது.

இது  தமிழர்கள் கலாச்சாரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக  கருதி, தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு,  மஞ்சுவிரட்டு போட்டிகள் கட்டாயம் நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்ற  எதிர்பார்ப்பும் இளைஞர்கள், மாணவர்கள்  மற்றும்  ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள் மத்தியில் எழுந் துள்ளது.
இதனால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாண வர்கள் அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப் படுத்தி உள்ளனர்.  பேஸ்புக், வாட்ஸ்&அப், நண்பர்கள் இணைந்து சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.இதனால்  ஜல்லிக்கட்டின் தாக்கம் அதிகரித்துள்ளது.

உலக  புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு, இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்ற  எதிர்பார்ப்பில் மதுரை மாவட்ட மக்கள் காத்திருக்கிறார்கள். இதற் காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கும்  பயிற்சிகள் வழங்கப்பட்டு  வருகிறது. எனவே அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில்  ஜல்லிக்கட்டை திட்டமிட்ட படி நடத்த  மத்திய, மாநில அரசுகள் உரிய சட்ட நடவடிக்கைகள்  எடுக்க வேண்டும்.  ஜல்லிக்கட்டை நடத்த  உச்சநீதிமன்றத்தில் உரிய உத்தரவுகளை பெற்றுத்தர வேண்டும்,  “பீட்டா” அமைப்பை தடை செய்ய வேண்டும்  என்பது உள்ளிட்ட   கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

மதுரை, கோவை, சென்னை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரையில் இன்று 2-வது நாளாக மாணவர்கள்,  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை அருகே உள்ள தனிச்சியம், மேலூர் ஆகிய  இடங்களிலும் இன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

மேலூர் அருகே  உள்ள  வெள்ளலூர்,  கோட்ட நத்தம்பட்டி, உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, புதுப்பட்டி,  மேலவலசை,  இடையவலசை, குறிஞ்சி பட்டி உள்ளிட்ட  50 கிரா மங்களில்  கடையடைப்பு நடத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கிராமங்களில் இருந்து ஒன்றுதிரண்டு ஊர்வலமாக மேலூரில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பொங்கல் பண்டிகைக்கு  இன்னும் 2 நாட்களே  உள்ள  நிலையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சக்கட்டதை எட்டி உள்ளது. உரிய அனுமதி கிடைக்காவிட்டால், தடையை மீறி, ஜல்லிக்கட்டை நடத்தியே  தீருவோம் என்று  ஆர்வலர்கள்  அறிவித்துள்ளனர். இதனால் மதுரை  மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் பதட்டமும்,   பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு  கிராமங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும்  பலப்படுத்   தப்பட்டுள்ளன.

Next Story