தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கல் திருநாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கல் திருநாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும்:  மு.க. ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2017 1:39 PM GMT (Updated: 11 Jan 2017 2:12 PM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவூர்,

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. சார்பில் கோவூரில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.  இதில் கலந்து கொண்ட பின் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என கூறினார்.

தொடர்ந்து அவர், தமிழ் பண்பாட்டிற்கு ஆபத்து என்றால் தமிழினம் அதனை பார்த்து கொண்டிருக்காது.  தமிழகத்தில் விவசாயிகளின் நிலை வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது.  இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Next Story