பெட்ரோல் நிலையம் அமைக்க தடைஇல்லாத சான்றிதழ் பெறக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு


பெட்ரோல் நிலையம் அமைக்க தடைஇல்லாத சான்றிதழ் பெறக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 15 Jan 2017 9:30 PM GMT (Updated: 15 Jan 2017 9:30 PM GMT)

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வி.பி.ஆர். மேனன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘மாநில நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும்போது, அதற்கு தடைஇல்லா சான்றிதழை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் வாங்கவேண்டும் என்று இந்தியன் ரோடு காங்கி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வி.பி.ஆர். மேனன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘மாநில நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும்போது, அதற்கு தடைஇல்லா சான்றிதழை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் வாங்கவேண்டும் என்று இந்தியன் ரோடு காங்கிரஸ் என்ற மத்திய அரசின் நெடுஞ்சாலை அமைப்பு விதிகளை உருவாக்கியுள்ளது. இந்த விதிமுறைகளை, பிறமாநிலங்களில் முறையாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. எனவே, இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற பிப்ரவரி 27–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story