கோவில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் வெள்ளி பொருளை திருடிய 2 பேர் கைது


கோவில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் வெள்ளி பொருளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2017 11:00 PM GMT (Updated: 17 Jan 2017 9:55 PM GMT)

கோவில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நவிமும்பை,

கோவில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளி பொருள் திருட்டு

நவிமும்பை, நெருல் கராவேகாவ் குளம் அருகே பழமையான விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் கடந்த நவம்பர் 10–ந் தேதி ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது. இதுகுறித்து கோவில் பூசாரி அளித்த புகாரின் பேரில் நவிமும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் போலீசார் நெருல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணிக்லாலை (வயது 29) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் விநாயகர் கோவில் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி பொருளை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சங்கரை (26) என்பவரையும் கைது செய்தனர்.

அதுமட்டும் அல்லாமல் நாசிக்கில் உள்ள ஆட்டோ டிரைவர் கணிக்லாலின் வீட்டில் இருந்து 5 கிலோ வெள்ளி பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story