ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்யமுடியாது - பிரதமர் மோடி


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்யமுடியாது  - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Jan 2017 6:34 AM GMT (Updated: 19 Jan 2017 6:52 AM GMT)

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்யமுடியாது தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறிஉள்ளார்.


புதுடெல்லி

பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்து பேசினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமரிடம் விரிவாக எடுத்து கூறி னார்.பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உரிய சட்ட திருத்தம் கொண்டு வருமாறு கோரிக்கை மனுவும் கொடுத்தார்.மாணவர்கள், இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக போராட்டகளத்தில் குதித்துள்ளதையும் ஓ.பன்னீர்செல்வம்சுட்டிக் காட்டி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் விரைந்து எடுக்கும்படி வற்புறுத்தினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: -

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்காட்டு கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு வாய்ந்தது.தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு  மத்திய அரசு ஆதரவாக இருக்கும்.ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியா எதுவும் செய்யமுடியாது.ஜல்லிக்கட்டு தீர்ப்பு வந்த பிறகு இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். என கூறி உள்ளார்.



Next Story