மாநில செய்திகள்
திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பர் மு.க.ஸ்டாலின் பேட்டி

திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பர் மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்போம்.அதிமுக ஆட்சிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வாக்களிப்போம்.திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பர். விடுதியிலுள்ள எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். சரியான பாடம் புகட்ட மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் திமுக வரவேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.