ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டி தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் சாவு


ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டி தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2017 10:09 PM GMT (Updated: 18 Feb 2017 10:08 PM GMT)

ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டி தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

தீக்குளித்தார்

பெரிய காஞ்சீபுரம் பல்லவர்மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் மூசா (வயது 37). அ.தி.மு.க. தொண்டர். கடந்த 15-ந்தேதி மாலை காஞ்சீபுரம் வணிகர் வீதிக்கு மூசா சென்றார்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு ஜெயலலிதா சமாதியில் 3 முறை ஓங்கி அடித்ததை பொறுக்க முடியாமலும் மனம் நொந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

சாவு

உடனே அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூசா பரிதாபமாக இறந்தார். உயிரிழந்த மூசாவுக்கு நிஷா (35) என்ற மனைவியும், சையத் (10) என்ற மகனும், பானு (15) என்ற மகளும் உள்ளனர்.

இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story