குடியரசு தலைவரை சந்திக்கிறார் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்


குடியரசு தலைவரை சந்திக்கிறார் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Feb 2017 4:36 PM GMT (Updated: 20 Feb 2017 4:35 PM GMT)

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23ந்தேதி மாலை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்திக்கிறார்.

சென்னை,

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்.  இந்த சந்திப்பில் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் பற்றி குடியரசு தலைவரிடம் முறையிட உள்ளனர்.

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்பொழுது தி.மு.க. உறுப்பினர்கள் தாக்கப்பட்டது பற்றி முறையிடுகின்றனர்.

Next Story