கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்


கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 24 Feb 2017 10:15 PM GMT (Updated: 24 Feb 2017 7:14 PM GMT)

கோடியக்கரை அருகே அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தினர்.

வேதாரண்யம், 

அடுத்தடுத்து தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை மீனவர்கள், மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தங்களது படகில் தப்பி சென்று விட்டனர்.

அதேபோல் கோடியக்கரைக்கு அருகே மற்றொரு படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த பாம்பனை சேர்ந்த 7 மீனவர்களையும் தாக்கிய இலங்கை மீனவர்கள் மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

மீனவர்கள் கோரிக்கை

அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story