ஜெயலலிதாவின் உருவபடத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என்பதா? ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம் கண்டனம்


ஜெயலலிதாவின் உருவபடத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என்பதா? ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 25 Feb 2017 3:50 PM GMT (Updated: 25 Feb 2017 3:50 PM GMT)

ஜெயலலிதாவின் உருவபடத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என்பதா? -என திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

குற்றவாளியின் படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பது, அரசு விழாக்களில் இடம் பெறச் செய்வது, அவர் பெயரில் அரசு திட்டங்களை செயல்படுத்துவது எல்லாமே பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்ற கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறாகவும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகழ் பரப்பும் செயலில் அரசாங்கமே ஈடுபடுவதும்,   அரசு பணத்தில் திட்டங்களை அறிவித்து குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தி  வருவதும் எதிர்கால  தலைமுறையினருக்கும்,  இளைய தலைமுறையினருக்கும் மக்களாட்சியின் மாண்பின் மீது மிகப்பெரிய அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விடும்.

ஊழல் செய்த வர்களின் புகழை அரசாங்கமே பரப்பும் போது நாம் ஏன் தூய்மையாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசு  நிர்வாகத்திலும் ஏற்பட்டு மாநிலத்தின் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து விடும் ஆபத்து உருவாகி விடும்.  குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் சென்று அங்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை அகற்றவேண்டும் என ஸ்டாலின் கூறியதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என ஸ்டாலின் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துகொள்கிறேன். அரசியல் நாகரிகம் இல்லாமல் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை தமிழக மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாது.மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை செய்ய வேண்டும். அகற்றும் நிலை உருவானால் ஜெயலலிதா படத்தை தொண்டர்கள் வைப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story