இனயம் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தர முதல் அமைச்சரிடம் வலியுறுத்தினேன்: பொன்.ராதாகிருஷ்ணன்


இனயம் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தர முதல் அமைச்சரிடம் வலியுறுத்தினேன்:  பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 27 Feb 2017 3:15 PM GMT (Updated: 27 Feb 2017 2:58 PM GMT)

இனயம் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தர வலியுறுத்தினேன் என்று முதல் அமைச்சரை சந்தித்த பின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தவிர 6 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திட்டம் பற்றி முழு ஆய்வு நடத்த கோரிக்கை வைக்கலாம்.  தமிழகம் தவிர எந்த மாநிலமும் பிரச்னை செய்யவில்லை.  மக்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க இந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வராது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story