தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒருதலைபட்சமானது - நாஞ்சில் சம்பத் பேட்டி


தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒருதலைபட்சமானது - நாஞ்சில் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 23 March 2017 4:50 AM GMT (Updated: 23 March 2017 4:49 AM GMT)

தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒருதலைபட்சமானது என சசிகலா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறிஉள்ளார்.


சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தலைமை தேர்தல் கமிஷன் நேற்று இரவு அறிவித்தது.

அத்துடன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

இரு அணியினரும் தாங்கள் எந்த பெயரால் அழைக்கப்படவேண்டும் என்பதை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், சுயேச்சை சின்னங்களில் இருந்து ஏதாவது மூன்றை குறிப்பிட்டு அதில் ஒரு சின்னத்தை இன்று காலை பெற்றுக்கொள்ள்லாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இரு கட்சியினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் ஏப்ரல் 17-ந் தேதி கொடுத்து முறையிடலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.

தேர்தல் கமிஷனின் இந்த முடிவு பற்றி தெரிய வந்ததும், இரு தரப்பினரும் தங்கள் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியாக அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையே சசிகலா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தந்தி டிவிக்கு அளித்து உள்ள பேட்டியில் தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒருதலைபட்சமானது என கூறிஉள்ளார். 

Next Story