ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் சசிகலா அணிக்கு தொப்பி சின்னம்


ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் சசிகலா அணிக்கு தொப்பி சின்னம்
x
தினத்தந்தி 23 March 2017 6:11 AM GMT (Updated: 23 March 2017 6:10 AM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை மின்கம்பம் சின்னம் ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கபட்டது சசிகலா அணிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை

அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டதால், ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் இதில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து ஆர்.கே.நகர்., தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம்தான், வழங்கப்படும். அதில், கட்டில், பீரோ, கிரிக்கெட் பேட், விசில், தொப்பி இதில் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடலாம்.

ஒருவேளை சுயேச்சைகளும் குறிப்பிட்ட சின்னத்தை கோரினால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என்ற பரிதாப நிலைக்கு பன்னீர், சசி அணி தள்ளப்பட்டுன.

இந்த நிலையில் ஓபிஎஸ் அணி தரப்பில் அம்மா.அ.தி.மு.க  என கட்சிபெயரையும், சின்னமாக இரட்டை விளக்கு பரிந்துரைந்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா அணி சார்பில் அ.தி.மு.க அம்மா என கட்சிம் பெயரையும்  கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்‌ஷா,  கத்திரிக்கோல் ஆகிய சின்னங்கள் பரிந்துரை செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை மின்கம்பம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா, ஓபிஎஸ் அணியினர்  போட்டா போட்டி போட்டனர். ஏன் என்றால்  அது இரட்டை இலைச் இன்னம் போன்றே இருந்தது. இரட்டை மின்கம்பம் சின்னம் ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கபட்டது சசிகலா அணிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அணியின் கட்சி பெயர் அ.இ.அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா சசிகலா அணியின் கட்சி பெயர் அ.இ.அ.தி.மு.க அம்மா என பெயர் கொடுக்கப்பட்டு உள்ளது.


Next Story