தண்ணீரில் கால்படாமல் இருப்பதற்காக, ஐ.ஏ.எஸ் அதிகாரியை தூக்கி சென்ற கிராம மக்கள்


தண்ணீரில் கால்படாமல் இருப்பதற்காக, ஐ.ஏ.எஸ் அதிகாரியை தூக்கி சென்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 24 March 2017 11:17 AM GMT (Updated: 24 March 2017 11:17 AM GMT)

தண்ணீரில் கால்படாமல் இருப்பதற்காக, ஐ.ஏ.எஸ் அதிகாரியை கிராம மக்கள் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ச்சூர்

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர் குர்மா ராவ். ஒரு கிராமத்திற்கு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது கிராமங்களின் உட்பகுதிகள் வரை சென்றார். இந்நிலையில் புர்திபாடா கிராமத்தின் எல்லைப் பகுதிக்கு சென்ற போது, அப்பகுதியில் சாலைகளில் நீர் நிரம்பி காணப்பட்டது.

இதையடுத்து அவரை கிராமமக்கள் தூக்கிச் சென்று, நீரை கடந்து இறக்கி விட்டனர். அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி குர்மா ராவ், தன்னை தூக்கிச் செல்ல கிராம மக்களிடம் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்ததாக கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் தன்னை தூக்கிச் சென்றதாக குர்மா குறிப்பிட்டார். கிராம மக்கள் ஆட்சியரை தூக்கிச் செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Next Story