ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன்-தீபா வேட்பு மனுக்கள் ஏற்பு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:  டிடிவி தினகரன்-தீபா வேட்பு மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 24 March 2017 11:29 AM GMT (Updated: 24 March 2017 11:29 AM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக(அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா வேட்பு மனுவும் ஏற்பட்டது

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. அம்மா அணி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி மதுசூதனன், தி.மு.க.வின் மருது கணேஷ், பா.ஜ.க. வின் கங்கை அமரன், தே.மு.தி.க.வின் மதி வாணன் உள்பட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் பரி சீலனை  இன்று (வெள்ளிக் கிழமை) நடந்தது. ஒவ்வொரு மனுதாரரின் சார்பில் தலா 3 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. தினகரனுக்காக நவநீத கிருஷ்ணன், வெற்றிவேல்,  தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ண மூர்த்தி சென்றனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் வக்கீல்கள் திருமாறன், பாபு பங்கேற்றனர்.
தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்காக தி.மு.க. சட்டத்துறை செயலாளரும் வக்கீலுமான கிரிராஜன், பொம்முராஜ், அருண் ஆகியோர் மனுக்கள் பரிசீலனையில் கலந்து கொண்டனர். என் தேசம் என் உரிமை கட்சி சார்பில் ஜெயஸ்ரீ பங்கேற்றார்.

தேர்தலை நடத்தும் அதிகாரி பிரவீண்நாயர் முன்னிலையில் மனுக்கள் ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. பணம் கட்டாமல் வேட்பு மனு கொடுத்திருப்பவர்களின் மனுக்கள் உடனே தள்ளுபடி செய்யப்பட்டன.
 
ஏற்கனவே நடந்த தேர்த லில் போட்டியிட்டவர்கள் செலவு கணக்கை உரிய முறையில் ஒப்படைத்து இருக்கிறார்களா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மனு செய்தவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்கு பின்னணி உள்ளதா என்றும் பரிசீலிக்கப்பட்டது.

சில ச்யேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதுபோல் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்  மனுவும் மாற்று வேட்பாளரின் மனுவும் தள்ளுபடிச் செய்யபட்டது.

தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன், நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம்  ஆகியோர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் வேட்பு மனு ஏற்கபட்டது

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் செயலாளர்  ஜெ.தீபாவின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.அவர் தனது மனுவில் கணவர் பெயர் குறிப்பிடவில்லை என புகார் எழுந்து உள்ளது.

அதுபோல் அ.தி.மு.க அம்மா  கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனு பரிசீலனையின் போது தி.மு.க வேட்பாளர்  எதிர்ப்பு தெரிவித்தார் . டிடிவி தினகரனுக்கு பெரா வழக்கில் தொடர்பிருப்பதால் நிராகரிக்க கோரிக்கை விடுத்தார்.

அதிமுக (அம்மா) வேட்பாளர் தினகரன் வேட்பு மனுவை ஏற்பது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்தார்.

இந்த நிலையில் டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கபட்டு உள்ளதாக தக்வல் வெளியாகி உள்ளது.அதுபோல் தீபாவின் மனுவும் ஏற்று கொள்ளபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story