ஹைட்ரோகார்பன் திட்டம் ஒப்பந்தத்தில் கையெழுத்தானால் போராட்டம் வேகம் எடுக்கும் போராட்டக்குழு எச்சரிக்கை


ஹைட்ரோகார்பன் திட்டம் ஒப்பந்தத்தில் கையெழுத்தானால் போராட்டம் வேகம் எடுக்கும் போராட்டக்குழு எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 March 2017 1:39 PM GMT (Updated: 26 March 2017 1:39 PM GMT)

ஹைட்ரோகார்பன் திட்டம் ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்தானால் எங்கள் போராட்டம் வேகம் எடுக்கும் போராட்டக்குழுவை சேர்ந்த காமராசு கூறியுள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்திலும் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக, நெடுவாசல் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்தது, அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாது என அரசுக்கள் தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. 

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நெடுவாசல் போராட்டக்குழுவைச் சேர்ந்த காமராசு தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகளிடம் கருத்து கேட்போம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. திட்டம் குறித்து எங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. நாளை திட்டம் கையெழுத்தானால் எங்கள் போராட்டம் வேகம் எடுக்கும். மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதாலேயே எங்கள் போராட்டத்தை கைவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story