57 ஆயிரம் பேருக்கு வீடு, விஷன் ஆர்.கே.நகர் செயலி அதிமுக அம்மா அணி தேர்தல் அறிக்கை


57 ஆயிரம் பேருக்கு வீடு, விஷன் ஆர்.கே.நகர் செயலி அதிமுக அம்மா அணி தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 27 March 2017 1:30 PM GMT (Updated: 27 March 2017 1:30 PM GMT)

மக்கள் பிரச்சனையை உடனுக்குடன் தீர்க்க விஷன் ஆர்.கே.நகர் என்ற செயலி உருவாக்கப்படும் என அதிமுக அம்மா அணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான அதிமுக அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமசந்திரன் வெளியிட முதல்-அமைச்சர் பழனிசாமி பெற்றுக் கொண்டார். 

* 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும்.

* 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* ஆர்.கே.நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். 

* எண்ணூர் - மணலி சாலையில் ரூ. 117 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்.

* பட்டா இல்லாத வீடுகளுக்கு விதிமுறைப்படி பட்டா வழங்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள், குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை

* கொருக்குபேட்டையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படும்.

* கைலாச முதலி தெருவில் 400 குடிசை வாசிகளுக்கு குடியிருப்புகள் கட்டப்படும்.

* ஆர்.கே.நகர் தொகுதியில் வாரந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும். 

* அரசு, வங்கி பணியாளர்கள் தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

* கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாசு இல்லாமல் நவீனமயமாக்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.
   
* பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மானியக்கடன் தரப்படும். 

* அரசு, தனியார் வங்கி கிளைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* வட்டார போக்குவரத்து அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* ஐஓசி பேருந்து நிறுத்தம் பேருந்து நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

* புதிய மீன் அங்காடி அமைக்கப்படும்

* கொடுங்கையூர் எழில்நகரில் 3 சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் மயானம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட 38 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அக்கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஸ்டாலின் தங்கள் கூட்டணி தோற்றுவிடும் என்ற பயத்தி பேசுகிறார்கள் என கூறிஉள்ளார். 

Next Story