மாநில செய்திகள்

தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு: கே.பி.முனுசாமி + "||" + Consider the interest of volunteers Negotiating the Team System KP Munusami

தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு: கே.பி.முனுசாமி

தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு: கே.பி.முனுசாமி
தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படும் என கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
சென்னை,

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்று சென்னையில் தலைமை கழகத்தில் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் விதித்த நிபந்தனைகளாலும், அமைச்சர்களின் விமர்சனங்களாலும் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. இதனால் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திவருகிறார்.
இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மாபா. பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க அணிகள் இணைப்பு முயற்சியில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் நிபந்தனைகள் போன்றவை குறித்தும் இரட்டை இலை சின்னம் மீட்பு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளீத்த கே.பி முனுசாமி கூறியதாவது:-

தொண்டர்களின் நலன் கருதியும், மக்களின் நலன் கருதியும் இரு அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தைக்கு குழு அமைக்கபடும். குழுவில் யார் யார் இர்ருப்பார்கள் என பின்னர் அறிவிக்க்ப்படும்.என கூறினார்