உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செந்தில்பாலாஜி அறிவிப்பு


உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செந்தில்பாலாஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 April 2017 10:03 AM GMT (Updated: 26 April 2017 10:02 AM GMT)

கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி அறிவித்து உள்ளார்.

கரூரில் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைவதாக திட்டமிடப்பட்டது. இதனிடையே கல்லூரி அமையவிடாமல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முட்டுக்கட்டை போடுவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும், மருத்துவக் கல்லூரியை இடமாற்றம் செய்யவும் தம்பிதுரை முயற்சி செய்வதாக செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவிருந்த இடத்தை மாற்றியதன் காரணம் என்ன என கேள்வி எழுப்பிய அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, .அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை கண்டித்து வருகிற 28-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


Next Story