தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்


தமிழ்நாடு அரசு ஊழியர்களின்  வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 26 April 2017 2:44 PM GMT (Updated: 26 April 2017 2:43 PM GMT)

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியத்தில் கால பணி இடங்களை நிரப்ப வேண்டும்.

 சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்  செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. 

இந்த வேலை நிறுத்தத்திற்கு வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, அங்கன்வாடி பணியாளர் சங்கம் உள்ளிட்ட 61 சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.கருவூலங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஊழியர்கள் பணிக்கு வராததால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டன. 

இந்த நிலையில், அமைச்சர் உதயகுமார் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Next Story