அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் என்ன?


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் என்ன?
x
தினத்தந்தி 27 April 2017 7:21 AM GMT (Updated: 27 April 2017 7:19 AM GMT)

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் இன்று நாளை என இழுபறி ஏற்பட்டு வருகிறது. இதற்குரிய பரபரப்பான காரணம் வெளியாகி உள்ளது



சென்னை,

ஜெயலலிதாவின் மறை வுக்கு பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் கட்சியின் துணை பொதுச்செயலாளராக நிய மிக்கப்பட்ட டி.டி.வி.தின கரனும் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு பிள்ளை யார் சுழி போட்ட ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

இரட்டை இலை சின் னத்தை மீண்டும் பெற வேண்டுமென்றால் தனித் தனியாக செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி அணியும் இணைய வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைக்கு இரு அணிகளுமே தயாராகி வரு கின்றன.

சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து முழுவதுமாக விலக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றால்  அங்கிருக்கும் சசிகலா பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று நேற்று காலையில்  ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இதனை ஓ.பி.எஸ். அணியினர் தங்க ளுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதினர்.

ஆனால் எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம், இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஓ.பி.எஸ். அணியினர் கேட்டுக்  கொண்டதால் நாங்கள் சசிகலா பேனர்களை அகற்றவில்லை. இது நாங்களாகவே எடுத்த முடிவு என்று தெரிவித்தார். இது ஓ.பி.எஸ். அணியினருக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, சி.வி.சண்முகம் கூறுவது போல அவர்களாகவே சசிகலா பேனர்களை அகற்று வதற்கு முடிவு செய்திருந்தால் அதனை முன் கூட்டியே செய்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரால் மட்டுமே கட்சியை வழி நடத்திச் செல்ல முடியும் என்று கூறி இருக்கிறார்.  ஓ.பி.எஸ். அணியினர் சசிகலாவையும், தினகரனையும் முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும் என்று கூறி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் இது போன்று தொடர்ந்து சசிகலா ஆதரவு கருத்துக்களை கூறி வருகிறார். இதுவும் ஓ.பி.எஸ். அணியினரை யோசிக்க வைத்திருக்கிறது.

இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை கனிந்து வரும் நேரத்தில், எடப்பாடி அணியினரின் இது போன்ற கருத்துக்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவே  ஓ.பி.எஸ். அணியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது, நாளை தொடங்குகிறது என்பது போன்ற தகவல்கள் தினம் தோறும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே பேச்சு நடத்த தயாராக  இருக்கிறோம் என்று இரண்டு அணி நிர்வாகிகளும் போட்டி போட்டுக்கொண்டு கருதுக்களை கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு முறை கூட நேரடியாக இரு அணிகளை சேர்ந்தவர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. இதற்கு மாறாக பேட்டிகளின் வாயிலாகவே இரு அணியினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்துக் கொண்டே செல்கிறது.

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைவதற்காக பேச்சு வார்த்தை தீவிரம் அடைந்துள்ள  நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 3 நாட்களாக சென்னையில் நடந்தது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரம் ஒன்று பெறப்பட்டது.
 
சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் சசிகலா துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். எடப்பாடி  பழனிசாமி முதல்-அமைச்சராக நீடிப்பதற்கும் உறுதுணையாக இருப்போம் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தகவல்களை ஓ.பி.எஸ். அணியினர் திரட்டி வெளியில் கொண்டு வந்தனர். அது தொடர்பாக ஆதாரங்களையும் அவர்கள் கசிய விட்டுள்ளனர்.இணைப்பு  பேச்சு வார்த்தை  தீவிரமாகி வரும் நிலையில் எடப்பாடி அணியினரின்  இந்த செயல்பாடுகள் ஓ.பி.எஸ். அணியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 

Next Story