அறிவிக்கப்பட்டது போதாது அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்


அறிவிக்கப்பட்டது போதாது அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 27 April 2017 7:22 PM GMT (Updated: 27 April 2017 7:21 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதனால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3,080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல.

எனவே, அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையும் வகையில், அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும். அடுத்த 3 மாதங்களில் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். அதுவரை 50 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; அத்துடன் அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story