சிறுமியை கடத்தி விற்க முயன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி விற்க முயன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 April 2017 8:51 PM GMT (Updated: 27 April 2017 8:50 PM GMT)

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பவித்ரா (வயது 6).

சென்னை,

கடந்த 12.4.2015 அன்று பவித்ராவை தன் தாயார் பாதுகாப்பில் விட்டு விட்டு அனிதா வேலைக்கு சென்றார். அன்று பவித்ரா தனது வீட்டின் அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொல்கத்தாவை சேர்ந்த செனாஜ் பேகம் (40), பவித்ராவை கடத்த முயன்றார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் செனாஜ் பேகத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் செனாஜ் பேகம், பவித்ராவை கடத்தி விற்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து செனாஜ் பேகத்தை அசோக் நகர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் கவுரி அசோகன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கலைமதி, குற்றம் சாட்டப்பட்ட செனாஜ் பேகத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story