சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரசில் 2–ம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று நீக்கம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரசில் 2–ம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று நீக்கம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 27 May 2017 10:15 PM GMT (Updated: 27 May 2017 1:36 PM GMT)

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை,

சென்னை எழும்பூர்–தூத்துக்குடி–சென்னை எழும்பூர் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ.எண்.12693, 12694) நிர்வாக காரணங்களுக்காக 2–ம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து இன்று(சனிக்கிழமை) புறப்படும் ரெயிலிலும், சென்னை எழும்பூரில் இருந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) புறப்படும் ரெயிலிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

* மதுரை–டேராடூன்–மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில்(12687, 12688) 2–ம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய உடைமை பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. மதுரையில் இருந்து 28–ந்தேதி புறப்படும் ரெயிலிலும், டேராடூனில் இருந்து 2.6.2017 அன்று புறப்படும் ரெயிலிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

* மதுரை–சண்டிகார்–மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில்(22687, 22688) முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்றும், 2–ம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்றும் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. மதுரையில் இருந்து 28–ந்தேதி புறப்படும் ரெயிலிலும், சண்டிகாரில் இருந்து 2.6.2017 அன்று புறப்படும் ரெயிலிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story