மேட்டூர் அணை தூர்வாரும் பணி விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பழனிசாமி பேட்டி


மேட்டூர் அணை தூர்வாரும் பணி விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 28 May 2017 9:19 AM GMT (Updated: 28 May 2017 9:19 AM GMT)

முதன் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்படுவது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

மேட்டூர் அணை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின் முதல்-அமைச்சர் பழனிசாமி செய்தியார்களிடம் கூறியதாவது:

மேட்டூர் அணை முதன்முறையாக தூர்வாரப்படுவது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளில் முதன் முறையாக தூர்வாரப்படுகிறது. மேட்டூர் அணையில் தூர்வாரப்படும் ஒரு லட்சம் க.மீ. வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அணைகளையும் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும். 1934க்கு பிறகு முதன்முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறது. அணை தூர்வாரப்படுவதால் 10 சதவீதம் கூடுதலாக தண்ணீர் சேகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதற்கட்டமாக அச்சங்காடு நீர்த்தேக்க பகுதியில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Next Story