சசிகலா நீக்கம் தொடர்பாக சிக்கல் அ.தி.மு.க அணிகள் இணைப்பில் தாமதம்


சசிகலா நீக்கம் தொடர்பாக சிக்கல் அ.தி.மு.க அணிகள் இணைப்பில் தாமதம்
x
தினத்தந்தி 21 Aug 2017 8:11 AM GMT (Updated: 21 Aug 2017 8:10 AM GMT)

முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இன்னும் அதிமுக தலைமை அலுவலகம் செல்லாத நிலையில், அணிகள் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில்  பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி  மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால்  இதுவரை அது நிறைவேற்றபட்டாததால்   இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட சசிகலா செயல்பட முடியாத நிலையில் சிறையில் இருப்பதால்  கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில்  ஒரு குழுவை நியமிக்க  முடிவு செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story