ஆஷ்ரம் பள்ளி விவகாரம்: ஐகோர்ட்டில் ஐஸ்வர்யா தனுஷ் வழக்கு


ஆஷ்ரம் பள்ளி விவகாரம்:  ஐகோர்ட்டில் ஐஸ்வர்யா தனுஷ் வழக்கு
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 8:46 PM GMT)

நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி, சென்னை கிண்டியில் உள்ளது.

சென்னை,

இந்த பள்ளிக்கூடம் இயங்கும் கட்டிடத்துக்கு வாடகை வழங்கவில்லை என்று கூறி பள்ளிக்கூட கட்டிடத்துக்கு அதன் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பூட்டு போட்டு பூட்டினார். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகின.

இந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் இளம்பரிதி ஆஜராகி, ‘ஆஷ்ரம் பள்ளி கட்டிடத்துக்கு பூட்டு போட்ட அதன் உரிமையாளரின் நடவடிக்கையினால், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த உரிமையாளரிடம் இருந்து ரூ.5 கோடி இழப்பீடு கேட்டும், பூட்டை அகற்றக்கோரியும், பள்ளிக்கூடத்தின் செயலாளர் ஐஸ்வர்யா தனுஷ் வழக்கு தொடர உள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தாக்கல் செய்யுங்கள், நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார். இதையடுத்து ஐஸ்வர்யா தனுஷ் பெயரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story