முதலமைச்சர் பழனிசாமி அரசில், 5 ஊழல் அமைச்சர்கள் உள்ளனர் - திவாகரன்


முதலமைச்சர் பழனிசாமி அரசில், 5 ஊழல் அமைச்சர்கள் உள்ளனர் - திவாகரன்
x
தினத்தந்தி 23 Aug 2017 7:08 AM GMT (Updated: 23 Aug 2017 7:08 AM GMT)

முதலமைச்சர் பழனிசாமி அரசில், 5 ஊழல் அமைச்சர்கள் உள்ளனர் - என சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார்.

கும்பகோணம்

சசிகலா சகோதரர் திவாகரன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் குதிரை பேரம் பேசவில்லை. எடப்பாடி பழனிசாமி தான் குதிரை பேரம் நடத்துகிறார். முதலமைச்சர் பழனிசாமி அரசில், 5 ஊழல் அமைச்சர்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜனின் நியமனங்கள் செல்லாது. பழனிசாமி, பன்னீர்செல்வம் அல்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும்.

பெங்களூரு சிறையில் இருந்து  சசிகலா வெளியே சென்று வந்தார் என கூறுவது தவறான தகவல். பெங்களூருவில் பாதுகாப்பு இல்லாமல் எப்படி வெளியே செல்ல முடியும்.

தமிழக ஊழல் அரசால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. எங்களிடம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வைத்திலிங்கத்தை நீக்கியது போல் மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குதிரை பேரம் நடைபெறவில்லை. எம்.எல்.ஏ.க்கள் விரும்பி தான் புதுவை சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story