உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னருக்கு கடிதம்


உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னருக்கு  கடிதம்
x
தினத்தந்தி 23 Aug 2017 7:54 AM GMT (Updated: 23 Aug 2017 7:54 AM GMT)

'தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னை

'தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னருக்கு  கடிதம் அனுப்பியுள்ளனர். அதன்  பின் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 'தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஊழல் அரசு என்று குறை கூறிய பின்னர் பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தது எதனால்.

 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்'.

தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாரதீய ஜனதா தான் காரணம் . அணிகள் இணைப்பு பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை . பெரும்பான்மை இல்லாத இந்த அரசின் செயல்பாடு மோசமாக சென்று கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story