அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு குறித்து, சட்ட நிபுணர் கருத்து


அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு குறித்து, சட்ட நிபுணர் கருத்து
x
தினத்தந்தி 11 Sep 2017 11:45 PM GMT (Updated: 11 Sep 2017 7:59 PM GMT)

‘அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்தாலும், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பே நிலைநிற்கும்’, என்று பிரபல சட்ட நிபுணர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு மற்றும் பெங்களூரு நீதிமன்றம் ஆகியவை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பே நிலை நிற்கும் என்று, பிரபல சட்ட நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

அதிகார வரம்பில்லாத ஒரு நீதிமன்றம் ஒரு தடை ஆணையை வழங்கி, அதேசமயம் அதிகார வரம்புள்ள ஒரு நீதிமன்றம் தடை வழங்க மறுத்தால் அதிகார வரம்புள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புத்தான் நிலைநிற்கும்.

2-வது கருத்து, அதிகார வரம்புள்ள இருவேறு நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினாலும், இரு நீதிமன்றங்களுக்குள் எந்த நீதிமன்றம் மேலான நீதிமன்றமோ அதன் தீர்ப்புத்தான் நிலைநிற்கும்.

வழக்கு மூலத்தை பொறுத்து...

3-வது கருத்து, அடிப்படையில் ஒரு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு என்பது இடத்தை பொறுத்தோ (டெரிட்டோரியல்) அல்லது வழக்கின் மதிப்பை பொறுத்தோ (பெக்யூனெரி) தீர்மானிக்கப்படுகிறது. அது வழக்கு மூலத்தை (காஸ் ஆப் ஆக்‌ஷன்) பொறுத்து அமையும். ஒரு வழக்கு மூலத்தின் கோடியில் ஒரு பகுதி ஒரு நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் ஏற்படுவதாலேயே அந்த நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு ஏற்பட்டுவிடாது.

ஆங்கிலத்தில் இதை ‘போரம் கன்வீனியன்ஸ்’ என்பார்கள். ஆனால் பெங்களூரு நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புத்தான் வலுவுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story