நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்


நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 19 Oct 2017 9:13 AM GMT (Updated: 19 Oct 2017 9:13 AM GMT)

நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை

தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்க  செயலாளரான டாக்டர் ஆ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘உங்கள் அரசியல் ஆசைக்கு, வளர்ச்சிக்காக தயவுசெய்து நிலவேம்பு கஷாயம் குடிப்பதை இழுக்க வேண்டாம். உங்களின் ஒவ்வொரு செயலும், கருத்தும் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவே உள்ளது. உங்களுக்குத் தெரியாத விஷயத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் நீங்கள், உங்கள் சந்தேகம் தீர ஏதேனும் ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம்.

நீங்கள் கெளரவ டாக்டர் பட்டம் மட்டுமே பெற்றிருக்கிறீர்கள், நிஜ டாக்டர் அல்ல. நிலவேம்பைப் பற்றித் தெரியாமல் கருத்தைப் பதிவிட்ட நீங்களும் போலி மருத்துவர்தான். தடைசெய்யப்பட்ட எத்தனையோ மருந்துகள் இங்கு புழக்கத்தில் இருக்கும்போது அதைக் கண்டுகொள்ளாத நீங்கள், நிலவேம்பை மட்டும் எதிர்ப்பது ஏன்? இனிமேலும் இதுபோல் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதை விட்டுவிட்டு, உங்கள் நடிப்புத் தொழிலை மட்டும் பாருங்கள். தேவையில்லாமல் மருந்துகள் பற்றிப் பேசி போலி மருத்துவத் தொழில் செய்ய வேண்டாம். இவ்வாரு அவர் கூறி உள்ளார்.

Next Story