தந்தை- தாய்-பாஸ்: ஜெயலலிதா- இளவரசி -சசிகலா குறித்து விவேக் பேட்டி


தந்தை- தாய்-பாஸ்: ஜெயலலிதா- இளவரசி -சசிகலா குறித்து விவேக் பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2017 8:35 AM GMT (Updated: 21 Nov 2017 8:35 AM GMT)

போயஸ் தோட்டத்தில் வளர்ந்த போது தனது ஜெயலலிதா, இளவரசி, சசிகலா ஆகியோர் தந்தை- தாய்- பாசாகா இருந்ததாக கூறினார்.

சென்னை

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். சோதனையை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு  வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகள், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கின் தங்கை ‌ஷகிலா, ஜெயலலிதாவிடம் முன்பு உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு சோதனையும் நடத்தப்பட்டது.

விவேக் இந்து ஆங்கில பத்திரிகைக்கு  அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

எனக்கு சிறுவயதில் பட்டம் பறக்கவிட மிகவும் பிடிக்கும் ஆனால் நான் அனுமதிக்கபடவில்லை.

சிறுவயதில் சசிகலா (சின்னத்தை) என்னை தாக்கியதில்லை  என்னை பயமுறுத்த  குச்சியை பயன்படுத்துவார். பெரியத்தை( ஜெயலிதா)
என்னை அடிக்காதே என கூறுவார். பயத்தினால் நான் அழுவேன். பெரியத்தை வெறுத்ததில் ஒன்று என் அழுகை.  பாய், அழுவதை நிறுத்து என  கடுமையாக சொல்லுவார் நான் அழுகையை நிறுத்துவேன்.

என் அம்மா சிறைக்கு சென்றபோது நான் உணர்ச்சிவசப்பட்டேன், அழுகை போல் உணர்ந்தேன் , அழாதே என்று கூறுவதாக  நான் இன்னமும் அந்த அந்த கூர்மையான குரல் கேட்பதாக உணர்ந்தேன் எனக்கு கண்ணீர் வரவில்லை.

விவேக் தனது வளர்ப்பில் வித்தியாசமான பாத்திரங்களை வகித்த மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறார்.

அவரது சொந்த தாயார் இளராசி அவர் "அப்பாவி, ஒரு வழக்கமான இல்லத்தரசி" என்று குறிப்பிடுகிறார். அவர் கண்களில், அம்மா உருவமாக இருந்தார்.

ஜெயலலிதா ஒரு தந்தையாக இருந்தார் பாதுகப்பாகவும் செல்லம் கொடுப்பவராகவும் , எனது குறும்பை சகித்து கொள்பவராகவும் உணர்ந்தேன். நான் 9 அல்லது 10 வயதாக இருந்தபோது என் பிறந்த நாளில்,  எனக்கு பெரிய பரிசு கிடைத்தது. அது ஒரு பாவான காத்தாடி நான் மிகவும் உற்சாகமாக அடைந்தேன். பின்னர் நான் இறுதியாக பட்டம் பறக்க விட  அனுமதிக்கப்பட்டேன்.

ஒரே நிபந்தனை, நான்கு போலீஸ்காரர்கள் மாடியில்  என்னை கவனித்து கொண்டு நிற்க நான் பட்டம் பறக்க விட்டேன். மற்றொரு பெரிய உதவியாளரை அனுப்பப்பட்டார். அவர் அந்த பெரிய காத்தாடிகளை உயர்த்துவதற்கு உதவியாக இருந்தார் "என்று கூறி அவர் சிரிக்கிறார்.

சிறிய அத்தை சசிகலா "அவர் ஒழுக்கநெறியாளர், எனக்கு ஒரு கடினமான வழிகாட்டி. அவள் என் மீது  நோக்கி மிகவும் பாசமாக இருக்கிறார், ஆனால் நான் ஏதோ தவறு செய்தபோது என்னை கண்டிப்பார். சில நேரம் எனது பின்பக்கம் அவர் அடிப்பார். அது ஒரு கடினமான அன்பு என கூறினார்.


Next Story