தலைமைச் செயலக சங்க தேர்தல் நீண்ட வரிசையில் நின்று ஊழியர்கள் ஓட்டு போட்டனர்


தலைமைச் செயலக சங்க தேர்தல் நீண்ட வரிசையில் நின்று ஊழியர்கள் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 15 Dec 2017 11:30 PM GMT (Updated: 15 Dec 2017 10:19 PM GMT)

சென்னையில் தலைமைச் செயலக சங்க தேர்தலில் ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக ‘தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்’ செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடந்தது. ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதிகாரிகள் தவிர, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உதவியாளர்கள், உதவி பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள், கீழ்நிலை செயலர் என மொத்தம் 3 ஆயிரத்து 454 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்களாவர்.

‘அகரம்’ அணி சார்பில் தலைவர் பதவிக்கு கு.வெங்கடேசன் (நிதித்துறை பிரிவு அலுவலர்), செயலாளர் பதவிக்கு சி.கவிராஜன் (உள்துறை பிரிவு அலுவலர்), இணை செயலாளர் (பொது) பதவிக்கு எஸ்.பி.சார்லஸ் மோகன்ராஜ் (உதவி பிரிவு அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை), இணை செயலாளர் (விளையாட்டு மற்றும் பண்பாடு) பதவிக்கு சு.ஹரிசங்கர் (சட்டசபை செயலக உதவி பிரிவு அலுவலர்), பொருளாளர் பதவிக்கு ர.பாண்டுரங்கன் (உதவி பிரிவு அலுவலர், நகராட்சி நிர்வாகம்) ஆகியோர் போட்டியிட்டனர்.

‘வின்னர்ஸ்’ அணி சார்பில் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் எஸ்.பீட்டர் அந்தோணி சாமி, செயலாளர் பதவிக்கு எஸ்.ஆறுமுகம் (பிரிவு அலுவலர், நிதித்துறை), இணை செயலாளர் (பொது) பதவிக்கு வி.மணிவண்ணன் (பிரிவு உதவி அலுவலர், பொதுத்துறை), இணை செயலாளர் (விளையாட்டு மற்றும் பண்பாடு) பதவிக்கு என்.அருண் (வேளாண் துறை பிரிவு அலுவலர்), பொருளாளர் பதவிக்கு டி.கொளஞ்சிநாதன் (உதவி பிரிவு அலுவலர், கைத்தறி)


Next Story