தினகரன், கமல் தனிக்கட்சி ஆரம்பித்தால் , அதிமுகவுக்கு பாதிப்பும் இல்லை-முதலமைச்சர், துணை முதலமைச்சர்


தினகரன், கமல்   தனிக்கட்சி ஆரம்பித்தால் , அதிமுகவுக்கு பாதிப்பும் இல்லை-முதலமைச்சர், துணை முதலமைச்சர்
x
தினத்தந்தி 17 Jan 2018 7:01 AM GMT (Updated: 17 Jan 2018 7:01 AM GMT)

தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami #OPS

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாளையொட்டி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழககத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க என்று கோஷமிட்டனர். பின்னர் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். அதனை தொடர்ந்து விபத்தால் பாதிக்கப்பட்ட 2 தொண்டர்கள் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நிதியுதவி வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர்  இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

பிரதமர் நேரம் ஒதுக்கிய பின்பு சென்னையில் பிரம்மாண்டமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் . தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இலலை.  வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஹஜ் மானியம் ரத்து தொடர்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும் .


காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்தால் வலியுறுத்துவேன்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

#AIADMK #EdappadiPalaniswami  #OPS

Next Story