தேசிய செய்திகள்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் சகஜமாக உரையாடிய பிரதமர் மோடி + "||" + Modi walks up to opposition leaders

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் சகஜமாக உரையாடிய பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் சகஜமாக உரையாடிய பிரதமர் மோடி
பாராளுமன்றத்தில் சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சகஜமாக உரையாடிக்கொண்டு இருந்தார்.
புதுடெல்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது.  அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. முதல் நாள் இன்று அவை கூடியதும், மறைந்த  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக  ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நடவடிக்கைகள் துவங்கும் முன் அவைக்கு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்தனர். பிரதமர் மோடி  அவைக்கு வந்ததும் நேராக சென்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை  பார்த்து ”நமஸ்தே” என சிரித்தவாறு  கூறினார். பதிலுக்கு சோனியா காந்தியும் வணக்கம் செலுத்தினார். 
 
தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை பார்த்து பரஸ்பரம் வணக்கம் வைத்துக்கொண்டனர். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் ஷிராக் பிரதமர் மோடியின் காலில் வாழ்ந்து ஆசி பெற்றார். எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் நீண்ட நேரம் சுஷ்மா சுவராஜ் உரையாடிக்கொண்டு இருந்தார்.