பைனான்சியர் அன்புசெழியன் மீது போலீசார் வழக்குப்பதிவு - 3 தனிப்படைகள் அமைத்து கைது செய்ய தீவிரம் | நாமக்கல்: பண்ணை முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து, ரூ.4.85 காசுகளாக விலை நிர்ணயம். | கோவை: சித்தாபுதூரில் உள்ள நியாய விலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது | ஜெயலலிதா மரணம் - விசாரணை தொடங்கியது | 2018 ஆம் ஆண்டில் உலகை உலுக்கும் பெரும் பூகம்பங்கள் ஏற்படும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை | பணப்பற்றாக்குறையால் 325 பணிமனைகளில் 286 பணிமனைகள் மற்றும் பேருந்துகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன - விஜயகாந்த் | கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்களை காப்பாற்ற தயாராக இருக்கிறோம்: விஷால் |

மாநில செய்திகள்

இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி + "||" + no plan to meet the speaker today - Dinakaran support MLA's interview

இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி

இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி
இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறினார்.
சென்னை,

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் எதிர்க்கட்சியான திமுக ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளது. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் முதல் அமைச்சருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் முடிவுக்காக காத்திருக்க போவதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி 
தூக்கியுள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங் பான் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை  தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, சபாநாயகர் தனபால், 19 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். அதற்கு, அவர்கள் இடைக்கால விளக்கம் அளித்தனர். இதையடுத்து, முழு விளக்கம் அளிக்க, செப்டம்பர் 14ல் (இன்று) நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், கர்நாடக மாநிலம் குடகுவில் தங்கியுள்ள  டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  இன்று சென்னை வந்து சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக செய்திகள்வெளியாகி உள்ளது.

தினகரன் அணியில் இருந்து பிரிந்து எடப்பாடி அணிக்கு ஆதரவளித்த  ஜக்கையன் எம்.எல்.ஏ.. மட்டும் தனக்கு அளித்த நோட்டீஸ் தொடர்பாக விளக்கமளிக்க, காலை 10.30 மணிக்கு, சபாநாயகரை சந்திக்கிறார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறும் போது இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை. ஆட்சியை கலைக்கவும் தயங்க மாட்டோம், தினகரனின் வழியில் நாங்கள் நிற்போம் என கூறினார்.

இந்த நிலையில்  அனைத்து அமைச்சர்களுக்கும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அழைப்பு விடுத்துள்ளார். காலை 10 மணிக்கு அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.