பைனான்சியர் அன்புசெழியன் மீது போலீசார் வழக்குப்பதிவு - 3 தனிப்படைகள் அமைத்து கைது செய்ய தீவிரம் | நாமக்கல்: பண்ணை முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து, ரூ.4.85 காசுகளாக விலை நிர்ணயம். | கோவை: சித்தாபுதூரில் உள்ள நியாய விலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது | ஜெயலலிதா மரணம் - விசாரணை தொடங்கியது | 2018 ஆம் ஆண்டில் உலகை உலுக்கும் பெரும் பூகம்பங்கள் ஏற்படும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை | பணப்பற்றாக்குறையால் 325 பணிமனைகளில் 286 பணிமனைகள் மற்றும் பேருந்துகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன - விஜயகாந்த் | கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்களை காப்பாற்ற தயாராக இருக்கிறோம்: விஷால் |

உலக செய்திகள்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் உயிரிழப்பு + "||" + IS claims twin attacks in southern Iraq

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் உயிரிழப்பு
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 52 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாக்தாத்,

ஈராக்கின் திகார் மாகாணத்தில் நசிரியாவில் சாலையோர உணவகம் ஒன்றில் பயங்கரவாதி துப்பாக்கி சூடு தாக்குதல் மற்றும் தற்கொலை தாக்குதலை நடத்தி உள்ளான். இதனையடுத்து போலீஸ் சோதனை சாவடியில் பயங்கரவாதி கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளான். இந்த இரு தாக்குதல்களிலும் 52 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. தாக்குதலில் ஈரானியர்கள் நான்கு பேர் பலியாகி உள்ளனர் எனவும் தெரியவந்து உள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பெரும் தோல்வியை தழுவி வரும் நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 91 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள், அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.