மாநில செய்திகள்

ஆட்சி பொறுப்பேற்றுது முதல் மக்களுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்: முதலமைச்சர் பழனிசாமி + "||" + working for the first people responsible for the rule:eps

ஆட்சி பொறுப்பேற்றுது முதல் மக்களுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்: முதலமைச்சர் பழனிசாமி

ஆட்சி பொறுப்பேற்றுது முதல் மக்களுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்: முதலமைச்சர் பழனிசாமி
ஆட்சி பொறுப்பேற்றுது முதல் மக்களுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தருமபுரி,

தருமபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஆட்சியில் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை 
*டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

*தருமபுரி பின்தங்கிய மாவட்டம் என்பதால் 9000 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன 
*பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 27 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன
*டாக்டர் முத்துலெட்சுமி திட்டத்தின் கீழ், 87 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

*ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை
*டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 10 நாட்களில் 744 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்

*5 முறை வாய்ப்பளித்தும் ஆட்சியை மக்கள் நலனுக்காக திமுக பயன்படுத்தவில்லை 
*பிரச்னையை எப்படி சமாளிக்க வேண்டும் என எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார்
*மரத்தை விட்டு பூ கீழே விழுவதால் மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை

*எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு குறையை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
*டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
*டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது
*டெங்குவை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிப்பு, நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது

*காய்ச்சல் ஏற்பட்டவுடன் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்
*அரசுக்குநெருக்கடி கொடுத்து கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.இவ்வாறு அவர் பேசினார்.