மாநில செய்திகள்

மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தை எளிமைப்படுத்தியது தமிழக அரசு + "||" + Real Estate Plots

மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தை எளிமைப்படுத்தியது தமிழக அரசு

மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தை எளிமைப்படுத்தியது தமிழக அரசு
மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தை தமிழக அரசு எளிமைப்படுத்தி உள்ளது.
சென்னை,

 புதிய திட்டம் தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* வீட்டுமனைப் பிரிவுகளுக்கான வளர்ச்சி கட்டணங்கள் குறைப்பு

* அனுமதியற்ற மனைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் காலம் 6 மாதத்திலிருந்து 1 வருடமாக நீட்டிப்பு

* விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை 3 வகைகளாக பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கம்

* ஒரு மனைப்பிரிவில் ஒரே ஒரு மனை மட்டும் விற்கப்பட்டிருந்தாலும் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும்

* அந்த மனைப்பிரிவில் இதுவரை விற்கப்படாத மனைகளின் பரப்பில் 10% உள்ளாட்சி அமைப்புக்கு தானமாக வழங்க வேண்டும்.

* சென்னையில் 1975ஆம் ஆண்டிலிருந்தும், சென்னைக்கு வெளியே ஊரக பகுதியில் 1972ல் இருந்தும், நகரப் பகுதிகளில் 1980-லிருந்தும் 2016 அக்டோபர் வரை விற்கப்பட்ட நிலத்தை வரன்முறைப்படுத்தலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.