தேசிய செய்திகள்

அந்தமானில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார் நிர்மலா சீதாராமன் + "||" + Defence Minister Nirmala Sitharaman to visit Andaman for Diwali, Philippines later

அந்தமானில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார் நிர்மலா சீதாராமன்

அந்தமானில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார் நிர்மலா சீதாராமன்
பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பு படை வீரர்களுடன் அந்தமானில் கொண்டாடுகிறார்.
புதுடெல்லி,

பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்-மந்திரியானதை  தொடர்ந்து அவர் வசம் இருந்த  நிதி மந்திரி அருண் ஜேட்லிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்ட போது  வர்த்தகத் துறை இணை மந்திரியாக  இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புதுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் வரும் 18-ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அங்கு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.