தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் மோடியின் அலை தாக்கத்தை ஏற்படுத்தாது - வீரபத்ர சிங் + "||" + Modi wave will have no impact in HP says Singh

இமாச்சல பிரதேசத்தில் மோடியின் அலை தாக்கத்தை ஏற்படுத்தாது - வீரபத்ர சிங்

இமாச்சல பிரதேசத்தில் மோடியின் அலை தாக்கத்தை ஏற்படுத்தாது - வீரபத்ர சிங்
இமாச்சல பிரதேசத்தில் மோடியின் அலை தாக்கத்தை ஏற்படுத்தாது என அம்மாநில முதல்-மந்திரி வீரபத்ர சிங் கூறிஉள்ளார்.


சிம்லா, 

வட மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் வீரபத்ர சிங் முதல்–மந்திரியாக பதவி வகித்து வருகிறார். 68 தொகுதிகளை கொண்ட மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது.  இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 9–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18–ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. குஜராத் தேர்தல் தொடர்பான சஸ்பென்ஸ் தொடர்கிறது.

 இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி வீரபத்ர சிங், இமாச்சல பிரதேசத்தில் மோடியின் அலை தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறிஉள்ளார். 

மோடி அலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வீரபத்ர சிங் பதில் அளிக்கையில், “குஜராத் மாநிலத்திலே மோடியின் அலை பயனளிக்கவில்லை... பொதுமக்கள் திட்டமிடாத ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் பிரச்சனையை எதிர்க்கொண்டு வரும் நிலையில் எப்படி இமாச்சல பிரதேசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்?” என கேள்வியை எழுப்பிஉள்ளார். நான் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன், மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வேன் என கூறிஉள்ளார் வீரபத்ர சிங்.