தேசிய செய்திகள்

பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi arrives in Delhi after visiting #Philippines for the ASEAN-India and East Asia Summits.

பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
பிலிப்பைன்சில் நடைபெற்ற இந்தியா - ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.
புதுடெல்லி,

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.12-வது கிழக்கு ஆசிய உச்ச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தனது மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.