ரஷ்யாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் பயங்கரவாத வழக்கு தொடர்ந்தது உக்ரைன்


ரஷ்யாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் பயங்கரவாத வழக்கு தொடர்ந்தது உக்ரைன்
x
தினத்தந்தி 17 Jan 2017 2:42 PM GMT (Updated: 17 Jan 2017 2:42 PM GMT)

ரஷ்யாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் பயங்கரவாத வழக்கு தொடர்ந்துள்ள உக்ரைன், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது

த ஹாக்,

ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக உக்ரைன் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கும் எம்.எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐநா நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையில், “ பயங்கரவாதத்துக்கு துணை போவதற்காக , இந்த விவகாரத்தில் ரஷ்ய கூட்டமைப்புக்கு சர்வதேச பொறுப்பு உள்ளது என்று அறிவிக்க வேண்டும். உக்ரைனில் மறைமுகமாக ரஷ்யா தாக்குதலுக்கு துணைபோகிறது. எம்.எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குத்லுக்கும் ரஷ்யா உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயத்திடம் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story