உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 17 Jan 2017 7:51 PM GMT (Updated: 17 Jan 2017 7:51 PM GMT)

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டின் அதிபர் பார்க் கியுன் ஹையிடம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் விசாரணை நடத்தப்படும் என அரசு சிறப்பு வக்கீல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

* தென் கொரியாவில் ஊழல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டின் அதிபர் பார்க் கியுன் ஹையிடம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் விசாரணை நடத்தப்படும் என அரசு சிறப்பு வக்கீல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

* பசிபிக் பெருங்கடல் தீவு நாடான வனுவாட்டுவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால், குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* நிலாவில் கடைசியாக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் ஜீன் செர்னான், மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

* வெனிசூலா நாட்டில் புதிய பண நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகளவு மதிப்பு கொண்ட இந்த பண நோட்டுகளை எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* நைஜீரியா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஒரு பேராசிரியரும், ஒரு குழந்தையும் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு போகோஹரம் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். 

Next Story