அமெரிக்காவின் 45–வது ஜனாதிபதியாக டிரம்ப் 20ம் தேதி பதவி ஏற்பு


அமெரிக்காவின்  45–வது ஜனாதிபதியாக  டிரம்ப் 20ம் தேதி பதவி ஏற்பு
x
தினத்தந்தி 18 Jan 2017 4:27 PM GMT (Updated: 18 Jan 2017 4:27 PM GMT)

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டிரம்ப் 20ம் தேதி பதவி ஏற்கிறார்.

நியூயார்க்,

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அவர் வாஷிங்டனில்  (20–ந் தேதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்த நாட்டின் 45–வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.  டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினரும் திரளாக குவிகின்றனர். டிரம்ப் பதவி ஏற்கும் விழாவில் ஹிலாரி கிளிண்டன், அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், மற்றும் முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் அவரது மனைவி லாராஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story