புதிய ஏவுகணைகளை ஏவ வடகொரியா தயாராகி வருவதாக தகவல்


புதிய ஏவுகணைகளை ஏவ வடகொரியா தயாராகி வருவதாக தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2017 7:08 AM GMT (Updated: 19 Jan 2017 7:20 AM GMT)

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புதிய ராக்கெட்களை பரிசோதிக்க வடகொரியா தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சியோல்,
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புதிய ராக்கெட்களை பரிசோதிக்க வடகொரியா தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபையின் கடுமையான பொருளாதார தடையையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று, அந்த நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் விடுத்த செய்தியில், அணுகுண்டுகளை ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க தொலைதூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகி வருவதாக அதிரடியாக அறிவித்தார்.

அத்துடன் இந்த தொலைதூர ஏவுகணையை வடிவமைப்பதற்கான முயற்சி, இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். வடகொரியாவின்  ஏவுகணை திட்டங்களையும் அணு ஆயுத திட்டங்களையும் ஐநா  பாதுகாப்பு கவுன்சில்  தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தென்கொரியா அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நடமாடும் ஏவுதளங்களில் இரண்டு ஏவுகணைகள் ஏவுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளது. ஆனால், யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு தின உரையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனை நடத்தும் இறுதிகட்டத்தில் இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Next Story