இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: பனிச்சரிவில் சிக்கி 30 பேர் பலி?


இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: பனிச்சரிவில் சிக்கி 30 பேர் பலி?
x
தினத்தந்தி 19 Jan 2017 9:00 PM GMT (Updated: 19 Jan 2017 7:05 PM GMT)

இத்தாலியின் மத்திய பகுதியை நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரோம்,

இத்தாலியின் மத்திய பகுதியை நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தலைநகர் ரோம், அப்ருஜோ, லாஜியோ, மார்ச்சே உள்ளிட்ட பல நகரங்களை கடுமையாக உலுக்கியது.

வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அமிர்த்திரிஸ் என்ற நகரில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரில் சிறிய குன்றின் மேல் அமைந்திருந்த தனியார் ஓட்டல் ஒன்றின் மீது பனி சரிந்து விழுந்தது. இதில் அந்த ஓட்டல் முற்றிலுமாக மூழ்கியது. இந்த ஓட்டலில் விருந்தினர்கள் மற்றும் வேலையாட்கள் உள்பட 30 பேர் தங்கியிருந்ததாக தெரிகிறது.

அவர்கள் அனைவரும் இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அந்த பகுதி முழுவதும் பனிதுகள்கள் நிறைந்திருப்பதால் மீட்பு குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே ஹெலிகாப்டர்கள் உதவியோடு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. 

Next Story