ஜல்லிக்கட்டுக்கு மலேசிய எம்.பி. டான்ஸ்ரீ நல்லா ஆதரவு


ஜல்லிக்கட்டுக்கு மலேசிய எம்.பி. டான்ஸ்ரீ நல்லா ஆதரவு
x
தினத்தந்தி 19 Jan 2017 10:45 PM GMT (Updated: 19 Jan 2017 8:25 PM GMT)

மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தேசியத்தலைவராகவும், மலேசிய நாட்டு மேல்சபை எம்.பி.யாகவும் இருப்பவர் டான்ஸ்ரீ நல்லா.

கோலாலம்பூர்,

மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தேசியத்தலைவராகவும், மலேசிய நாட்டு மேல்சபை எம்.பி.யாகவும் இருப்பவர் டான்ஸ்ரீ நல்லா. இவரது பணிகளை பாராட்டி, மலேசிய மன்னர் துவாங்கு அப்துல் ஹலிம் பிறந்தநாளில் ‘டான்ஸ்ரீ’ எனும் உயரிய விருது வழங்கி மலேசிய அரசு கவுரவித்தது. இவர் ஏற்கனவே டத்தோ, டத்தோஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு டான்ஸ்ரீ நல்லா எம்.பி. ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு என்பது, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற சொல்லுக்கேற்ற வீரத்தமிழனின் விளையாட்டு. சரித்திர புகழ் வாய்ந்த பாரம்பரிய தமிழனின் வீர விளையாட்டு. தமிழ் மக்களின் கலாசாரத்தை சொல்லும் விளையாட்டு. வந்தாரை வாழ வைக்கும் தமிழனின் வீர விளையாட்டு. உயிரை துச்சமென மதிக்கும் வீரத்தமிழனின் வீரவிளையாட்டு.

நாட்டு மாடுகள் காக்கப்பட வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு போராடி வரும் எம் தமிழ் மக்களுக்கு எங்கள் மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சி ஆதரவு அளிக்கும்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story